TIME IS PRECIOUS

Saturday, December 14, 2019

BALA TRIPURA SUNDARI BLESS US ALL

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ கண்மணியே தெள்ளமுதே கட்டிக்கரும்பே செந்தேனே கண்மணியே தெள்ளமுதே கட்டிக்கரும்பே செந்தேனே வாழ்விக்கவந்த வாலையே.... வாழ்விக்கவந்த வாலையே வரம்பலதருகின்ற தாயேநீயே தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ

புத்தகம்கைகொண்ட வித்தகச்செல்வி எப்பொழுதும்இங்கு நீயேதுணை புத்தகம்கைகொண்ட வித்தகச்செல்வி எப்பொழுதும்இங்கு நீயேதுணை அபயவரத கைகள்கொண்டு... அம்மாஅபயவரத கைகள்கொண்டு அபயமும்வரமும் தருகின்றதாயே தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானே தெள்ளுதமிழே தீஞ்சுவையே துள்ளிக்குதித்தோடும் புள்ளிமானே தெள்ளுதமிழே தீஞ்சுவையே அள்ளிப்பருகும் அமுதம்நீயே அம்மாஅள்ளிப்பருகும் அமுதம்நீயே ஆடிவருகின்ற வாலேதாயே தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ


வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே எண்ணற்ற அணிகலன்பூண்டவளே வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே எண்ணற்ற அணிகலன்பூண்டவளே பொன்தொட்டில்பட்டு விரிப்பினிலே... பொன்தொட்டில்பட்டு விரிப்பினிலே பால்அன்னம்உண்ட களைப்பினில்உறங்கு தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ கண்கள்மூடிக் கண்ணுறங்கு கடைவிழியால் எமைக்கண்டுறங்கு கண்கள்மூடிக் கண்ணுறங்கு கடைவிழியால் எமைக்கண்டுறங்கு காலமெல்லாம் எமைக்காத்துறங்கு... காலமெல்லாம் எமைக்காத்துறங்கு கண்ணேஉறங்கு கண்மணிஉறங்கு தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிரரோ



No comments:

Post a Comment