TIME IS PRECIOUS

Saturday, December 14, 2019

BALA TRUPURA SUNDARI

Image result for balatripurasundari bala tripura sundari devi hd imagesImage result for balatripurasundari bala tripura sundari devi hd imagesImage result for balatripurasundari bala tripura sundari devi hd imagesImage result for balatripurasundari bala tripura sundari devi hd imagesImage result for balatripurasundari bala tripura sundari devi hd images




தாலேலோ தாலேலோ (2) |

ஆராரோ ஆரிராரோ (2) | = <<<<<<<<<<<<<<<<<< கண்மணியே, தெள்ளமுதே, கட்டிக்கரும்பே... செந்தேனே... (2) வாழ்விக்க வந்த வாலையே... (2) வரம்பல தருகின்ற தாயே நியே ! <<<<<<<<<<<<<<<<<< புத்தகம் கை கொண்ட வித்தகச் செல்வி , எப்பொழுதும் இங்கு நீயே துணை. (2)அபயவரத கைகள் கொண்டு அம்மா ......அபயவரத கைகள் கொண்டு அபயமும் வரமும் தருகின்ற தாயே ! <<<<<<<<<<<<<<<<<< துள்ளி குதித்தோடும் புள்ளிமானே தெள்ளு தமிழே தீஞ்சுவையே (2)அள்ளிபருகும் அமுதம் நியே அம்மா ......அள்ளிபருகும் அமுதம் நியே ஆடி வருகின்ற பாலே தாயே ! <<<<<<<<<<<<<<<<<< வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே, எண்ணற்ற அணிகலன் பூண்டவளே (2)பொன்தொட்டில் பட்டு விரிப்பினிலே (2)பால் அன்னம் உண்ட களைப்பினில் உறங்கு <<<<<<<<<<<<<<<<<< கண்கள் மூடி கண்ணுறங்கு , கடைவிழியால் எம்மை கண்டுறங்கு (2)காலமெல்லாம் எம்மை காத்துறங்கு (2) கண்ணே உறங்கு கண்மணி உறங்கு ! <<<<<<<<<<<<<<<<<< பச்சைக்கிளியே கண்ணுறங்கு அனிச்ச மலரே கண்ணுறங்கு (2)உச்சிதிலகமே கண்ணுறங்கு அம்மா ......உச்சிதிலகமே கண்ணுறங்கு உயிரே உறங்கு உறவே உறங்கு <<<<<<<<<<<<<<<<<< அன்னை லலிதையின் மடி இருப்பாய் உன்னை நினைத்தாலே உடன் வருவாய் (2)கண்ணை இமையது காப்பதுபோல் (2) எம்மை காப்பாய் உன்னடி சேர்ப்பாய் ! <<<<<<<<<<<<<<<<<< உதிக்கும் செங்கதிர் ஒத்தவளே உத்தமியே எங்கள் புத்திரியே (2)உவகை சேர்த்திட வந்தவளே (2) உலகை காத்திட உறங்காமல் உறங்கு !

No comments:

Post a Comment